பேரி அவென்யூ பகுதியில் ஸிக்கா தொற்று

பேரி அவென்யூ பகுதியில் இருவருக்கு ஸிக்கா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்தது. நோய் தொற்றிய இருவரும் அந்தப் பகுதியில் குடியிருப்பவர் கள். ஸிக்கா அவ்வாட்டரத்திலேயே தொற்றி இருப்பதாக அறியப் படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ஸிக்கா குறித்த தகவல் அறிக்கைகள் விநியோகம், வீடு களுக்கு கொசு ஒழிப்பு மருந்துகளைக் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை அடித்தளத் தொண்டூழியர்கள் உதவியுடன் வாரியம் மேற்கொண்டுள்ளது.

கொசு ஒழிப்பு, கொசு பெருகும் இடங்களை இல்லாமல் செய்வது போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபடு மாறும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கொசு ஒழிப்பு மருந்துகளை அடிக்குமாறும் பொதுமக்களையும் பங்குதாரர் களையும் சுற்றுப்புற வாரியம் கேட்டுக்கொண்டது. அதேநேரத்தில், வீடுகளில் சோதனை நடத்தவும் கொசு மருந்து அடிக்கவும் அதிகாரிகளை அனுமதிக்குமாறும் அது பொது மக்களிடம் கேட்டுக்கொண்டது. ஸிக்கா வைரஸ் தொற்றும் பெரும்பாலானோருக்கு அறிகுறி- கள் தெரிவதில்லை. மீண்டும் ஏற்பட்டுள்ள ஸிக்கா வைரஸை அடையாளம் காண சில காலம் ஆகலாம். இது மீண்டும் ஸிக்கா தொற்று பெருகும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.