7% சிங்கப்பூரர்கள் எதையும் வாசிக்கவில்லை

ஏழு விழுக்காடு சிங்கப்பூரர்கள் கடந்த 12 மாதங்களில், நூலோ, சஞ்சிகையோ, இணையக் கட்டு- ரையோ, செய்தியோ பதிப்பாகவோ இணையத்திலோ எதையுமே வாசிக்கவில்லை என்று தேசிய நூலக வாரியம் நேற்று வெளியிட்ட ஆய்வு தெரிவித்தது. மற்ற 93 விழுக்காட்டினர் கடந்த ஓராண்டில் ஒரு முறையா- வது எதையாவது வாசித்துள்ளனர். இதில் 80 விழுக்காட்டினர் வாரத் தில் ஒரு முறைக்கும் அதிக மாக வாசிக் கின்றனர் என்று 2016ஆம் ஆண்டுக்கான பெரிய வர் களிடம் தேசிய வாசிப்புப் பழக் கம் குறித்த ஆய்வு காட்டுகிறது. மேலும், வாசிப்பவர்களில் 66% ஆங்கிலத்திலும் தங்களது தாய்மொழியிலும் வாசிக் கின்றனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேசிய அளவில் 3,515 பேரிடம் வீடுவீடாகச் சென்று இந்த ஆய்வை தேசிய நூலக வாரியம் நடத்தியது. சென்ற ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தேர்ச்சி பெற்ற ஆய் வாளர்கள் ஆய்வை மேற் கொண்- ட னர் என்று வாரியம் கூறியது. சிங்கப்பூர் மக்களில் 68% வாரத்தில் ஒருமுறைக்கும் அதிக- மாக செய்தி வாசிக்கின்றனர். 41% இணைய கட்டுரைகளை (39%) சமூக ஊடகங்களில் அல்லது இணையத் தளங்களில் (27%) வாரத்தில் ஒருமுறைக்கும் அதிகமாக வாசிக்கின்றனர். இதனுடன் ஒப்பிட 19 விழுக்- காட்டினரே வாரத்தில் ஒருமுறைக் கும் அதிகமாக புத்தகம் வாசிக் கின்றனர் என ஆய்வு காட்டு - கிறது. புதினம் அல்லாத கட்டுரை நூல்களை வாசிப்போரில் 15% வாரத்தில் ஒருமுறைக்கும் அதிகமாக வாசிக்கின்றனர். புதின நூல்களை வாசிப்பவர்களில் 10% வாரத்தில் ஒருமுறைக்கும் அதிகமாக வாசிக்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon