வாசிப்பு விழா 2017

தேசிய நூலக வாரியத்தின் ஆண்டு நிகழ்வான தேசிய வாசிப்பு விழா நேற்றுத் தொடங்கியது. சிங்கப்பூரர்களிடம் பலதரப்ப விஷயங்களையும் வாசிப்பது, தாய்மொழியில் வாசிப்பது, உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பது போன்றவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 29ஆம் தேதி வரை நடைபெறும் வாசிப்பு விழாவையொட்டி ஏறக்குறைய 150 நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் உள்ள தேசிய நூலக வாரியத்தின் நூலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாசிப்பு விழா குறித்த நிகழ்ச்சிகளின் விவரங்களை www.nlb.gov.sg/readsingapore/ EventDetails/ என்ற இணையத் தளத்தில் காணலாம். வாசிப்பு விழாவையொட்டி ஜூலை 29ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளாவிய வாசிப்பு இயக்கம் குறித்து www.nationalreadingmovement. sg. என்ற இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.

விக்டோரியா ஸ்திரீட் நூலகத்தில் நேற்று நடைபெற்ற வாசிப்பு விழாவின் தொடக்கநிகழ்வில் உள்ளூர் எழுத்தாளர்களுடன் மக்கள் கலந்துரையாடினர். படத்தில் மக்களுடன் உரையாடும் எழுத்தாளர் கோன்ஸ்டன்ஸ் சிங்கம், கலைஞர் ஆனந்தக்கண்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon