சுடச் சுடச் செய்திகள்

மின்தூக்கி கூரைத் தகடு விழுந்து சிறுமி காயம்

மின்தூக்கியின் கூரைத் தகடு விழுந்ததால் 10 வயது சிறுமி புதன் கிழமையன்று காயமடைந்தார். அன்று பிற்பகல் 1.00 மணி- அளவில் செங்காங் புளோக் 325Aல் தமது குடும்பத்தாருடன் மின்தூக்கிக்குள் சிறுமி சென்றார். அப்பொழுது மின்தூக்கியின் கூரைப் பகுதியில் உள்ள விளக்கு களை மூடியிருந்த தகடு திடீரென கழன்று விழுந்தது. தகடு சிறுமியின் நெற்றிப் பகுதியில் உராய்ந்து சென்றதுடன் காலிலும் விழுந்து காயமேற்படுத்தி ரத்தம் வழிந்ததாக சிறுமியின் தந்தை ‌ஷின் மின் நாளிதழிடம் கூறினார். தனது மகளின் காலில் ‘டிஷ்யு’ தாளை வைத்து அழுத்திய போதி- லும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்று பலதுறைத் தொழிற்கல்லூரியில் விரிவுரை யாள ராக இருக்கும் சுங் கோ சூன், 43, விளக்கினார்.

ஆம் புலன்சில் சிறுமி கே கே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விளக்குகளை மூடும் கூரைத் தகடு சரிவரப் பொருத் தப்படாத- தால் விபத்து நடந்தி ருக்கலாம் என்று கட்டட கட்டு மான ஆணையம் கூறியது. சம்பவம் குறித்து புதன்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் தங் களுக்குத் தகவல் கிடைத்ததாக அங் மோ கியோ நகரமன்றப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

“சிறுமியின் காயம் குறித்து அறி வதற்காக சிறுமியையும் அவர் குடும்பத்தாரையும் நாங்கள் அன்று மாலை சென்று பார்த்தோம். சிறுமிக் கான மருத்துவச் செலவை ஈடு கட்ட காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்பு கொள்வதற்கு உதவி புரிவோம்,” என்று அவர் கூறினார். கட்டட கட்டுமான ஆணையத்- தின் பொறியாளர்கள், மின்தூக்கி குத்தகையாளர், நகர மன்ற ஊழி- யர்கள் ஆகியோர் மின்தூக்கியைப் பார்வையிட்டனர். குடியிருப்பாளர்- களின் பாதுகாப்புக் கருதி மூடப் பட்டிருக்கும் மின்தூக்கியில் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்- ளப்பட்டு வருகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon