சாலையில் எரிந்த மோட்டார் சைக்கிள்

மோல்மின் சாலை, பேலஸ்டியர் சாலை சந்திப்பில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது. நேற்று மாலை நடந்த இந்தச் சம்பவம் குறித்து தனக்கு மாலை 5.25க்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை. மோட்டார் சைக்கிள் ஓட்டி, தனது வாகனத்திற்கு ஏதோ ஆகிவிட்டது என்று உணர்ந்து வாகனத்தைப் பார்த்தபோது அதில் தீ பற்றி இருந்தது. தீக்கான காரணம் குறித்த விவரங்கள் தெரியவில்லை. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

Loading...
Load next