கோஹ்லி: எதிரணியை எளிதாகக் கருதக்கூடாது

லண்டன்: “‘பி’ பிரிவில் இலங்- கையுடன் இந்திய அணி தோற்றுப் போன வியாழக்கிழமை ஆட்டத்- தில் இந்தியா 3 விக்கெட் மட்டுமே கைப்பற்றியது. புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தி- னார். மீதி 2 விக்கெட்டும் ரன்= அவுட்டாகும். முக்கிய பந்து வீச்- சாளர்கள் யாரும் விக்கெட் கைப்- பற்றாமல் ஏமாற்றம் அளித்தனர். 300 ஒட் டங்களுக்கு மேல் குவித்தும் தோற்ற தற்குப் பந்து வீச்சில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தா ததே காரணம்” என்றார் விராத் கோஹ்லி. தோல்வி குறித்துப் பேசிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, “நாங்கள் போதுமான ஓட்டங்க- ளைக் குவித்தோம். எங்களது பந்து வீச்சாளர்களை நம்பினோம். ஆனால் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாகப் பந்தடித்தனர். அவர் கள் உத்வேகத்தை இழக்- காமல் சிறப்பாகப் பந்தடித்தனர். நாங்கள் ஒன்றும் வெல்ல முடியாத அணி அல்ல.

எங்களது பந்து வீச்சாளர்கள் நன்றாகத்தான் வீசினார்கள். ஆனால் அதை சரியாக செயல்படுத்தவில்லை. எந்த ஓர் அணியையும் எளி- தாக எண்ணிவிடக்கூடாது. அவ்வாறு எண்ணி விளை யாடி- னால் எதையும் சாதிக்க முடி யாது என்றார் விராத் கோஹ்லி. இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- வுடன் நாளை மோதுகிறது. இதில் வெற்றிபெறும் அணி அரை இறு- திக்கு முன்னேறும். ஒரு வேளை போட்டி மழையால் நின்றுவிட்டால் இரு அணி களுக்- கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்படி நடந்தால் இந்தியா, தென்ஆப்பிரிக்கா தலா 3 புள்ளிகளுடன் இருக்கும். இந்தியாவுக்கு ஓட்ட எண்ணிக்கை நல்ல நிலை யில் இருப்ப தால் அரைஇறுதிக்கு முன்னேறும் என நம்பப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பலர் இணையப்பக்கம் வழியாக விசா பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர்; சிலர் கட்டணம் செலுத்திய பிறகு அவர்களுக்கு விசா கிடைப்பதில்லை. விசாரித்தால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும். சிங்கப்பூரிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகின்றன.

15 Oct 2019

விசா எடுக்க வேண்டுமா? ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை அவசியம்

கிட்டத்தட்ட 44,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உரையாடல் குழுவில் செயலிமூலம் ஆபாசப் படங்களும் பெண்களின் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட காணொளிகளும் பகிரப்பட்டன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

15 Oct 2019

செயலிமூலம் ஆபாசத் தகவல்களைப் பகிர்ந்த நால்வரில் இருவர் பதின்ம வயதினர்

சிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. படம்: கோப்புப்படம்

15 Oct 2019

இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் முதல் கடப்பிதழ் இலவசம்