தவானின் சதமும் டோனியின் முயற்சியும் வீணாயின

லண்டனில் நடைபெற்றுவரும் வெற்றியாளர் கிண்ணப்போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதிய ஆட்டத்தில் தவானின் சதமும் 300 ஓட்டங்களைத் தாண்ட உதவிய டோனியின் முயற்சியும் வீணாகும் வகையில் இந்தியாவின் தோல்வி அமைந்தது. விக்கெட் சரிவால் மிடில் ஓவர்களில் ஓட்ட வேகம் சற்று தளர்ந்தாலும் ‌ஷிகர் தவானும் டோனியும் கைகோர்த்து ஆட்டத்- திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டி- னர். 38 ஓவர்களில் இந்தியா 200 ஓட்டங்களைத் தாண்டியது. அபாரமாக ஆடிய ‌ஷிகர் தவான் பவுண்டரி அடித்துத் தனது 10வது சதத்தை பூர்த்தி செய்தார். தவானும், டோனியும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை மளமள வென உயர்த்தினர். டோனி ஒரு இமாலய சிக்சரும் அடித்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். இலங்கை பவுலர்களின் வியூகம் இந்திய பந்தடிப்- பாளர்கள் முன் எடுபடவில்லை.

Loading...
Load next