தொலைக்காட்சியில் கார்த்திகா

முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்குத் திரையுலக வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் யோசனை சொல்ல, அதற்கான நேரம் கனிந்து வந்திருக்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கார்த்திகா. ‘பாகுபலி’ படத்தின் இயக்குநர் ராஜ மௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இவர்தான் ‘பாகுபலி’ படத்தின் கதாசிரியர். இவரது கைவண்ணத்தில் ‘ஆரம்ப்’ (ஆரம்பம்) என்ற தொலைக்காட்சித் தொடர் உருவாகிறது.

பல கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்த மெகா தொடரில் தேவசேனா பாத்திரத்தில் கார்த்திகா நடித்து வருகிறார். இம்மாதம் 24ஆம் தேதி முதல் ஸ்டார் நெட் ஒர்க் அலைவரிசைகளில் ஒளிபரப்பாக உள்ளது இந்தத் தொடர். கோல்ட் பெஹல் என்பவர் இதை இயக்கி வருகிறார். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இதில் தற்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவசேனா பாத்திரத்தில் நடிகை கார்த்திகாவும் வருண தேவனாக ரஜனீஷ் துக்காலும் நடித்து வருகிறார்கள். ‘பாகுபலி’ படக் கதாசிரியர் எழுதும் கதை என்பதால் ‘ஆரம்ப்’ தொடர் ஏக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. “திரைப்பட நடிகை என்றால் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கக் கூடாது என ஏதேனும் விதிமுறை உள்ளதா என்ன? என்னைப் பொறுத்தவரை என்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய எத்தகைய வாய்ப்பையும் ஏற்கவும் தயார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணியும் கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார். படம்: ஏஎப்பி

19 Oct 2019

லாரா கணிப்பு: கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

அரை சதம் அடித்த சிங்கப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேந்திரன் சந்திரமோகன். படம்: ஐசிசி

19 Oct 2019

2019 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று: சிங்கப்பூர் பேரெழுச்சி