மலேசிய களத்தில் 40,000 போலிசார்

கோலாலம்பூர்: அண்மையில் பல் வேறு நாடுகளில் நடைபெற்ற பயங் கரவாதத் தாக்குதல்கள் மிரட்டல் களை ஏற்படுத்தியிருக்கின்றன. அண்டை பிலிப்பீன்சின் மராவி யில் நிலவும் பிரச்சினை பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதி கரிக்கச் செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் நோன்பு காலம் முழுவதும் பாதுகாப்புக்கு 40,000க்கும் மேற்பட்ட போலிசாரை களத்தில் இறக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு நோன்பு காலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலிசாரின் எண்ணிக் கையைவிட அதிகம் என்று மலே சிய போலிஸ் தலைவர் காலித் அபு பக்கர் தெரிவித்தார்.

இதையொட்டி அனைத்து போலிசாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படும் என்று மலேசிய போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. கடந்த ஆண்டில் போலிஸ் படையில் உள்ள பத்து விழுக் காட்டினருக்கு மட்டுமே பண்டி கைக்கால விடுமுறை வழங்கப் பட்டது. “பொதுவான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான போலி சாருடன் 8,000 போக்குவரத்து போலிசாரும் பணியில் இருப்பர்.

 

மலேசிய போலிஸ் தலைவர் காலித் அபுபக்கர்