சுடச் சுடச் செய்திகள்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 1,000 இடங்களில் போராட்டம்

கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று ஆண்டு கால ஆட்சியில் நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினரும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் கூறினார்.. கோவையில் நேற்று முன்தினம் அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதைய டுத்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் முத்தரசன் (படம்), மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார். தமிழகம் பல்வேறு வகையிலும் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்றும் மத்திய அரசின் இத் தகைய போக்கை எதிர்த்து அரசு குரல் எழுப்பவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் விதமாகவே ஆயிரம் இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்திருப் பதாக அவர் சுட்டிக்காட்டினார். “தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். இதனால் வேலை இழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு, மாற்றுப் பணி வழங்க வேண்டும்.

“தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவ தற்கான மசோதா மீது குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். இதை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர் மானங்களை நிறைவேற்றி உள் ளோம்,” என்று முத்தரசன் கூறினார். டெல்லியில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியைத் தாக்க முற்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்- டிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத் தியப் பிரதேசத்தில் விவசாயி கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதை எந்த வகையிலும் ஏற்க இயலாது என்றார். இதற்கிடையே ஜூலை 5ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட கண்டனப் பொதுக்கூட்டம் நடை- பெற இருப்பதாகத் தெரிவித்த முத் தரசன், இதில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருப்ப தாகக் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon