3 நகரங்களுக்கு விமானச் சேவை

சென்னை: மிக விரைவில் ஓசூர், சேலம், நெய்வேலி உள்ளிட்ட நகரங்களை விமான சேவை வழி இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மூன்று நகரங்களுக்கான விமானச் சேவையைத் தொடங்குவது தொடர்பில் தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைந்து, தொழில் மற்றும் வர்த்தகம் பெருகி, வேலைவாய்ப்பு அதிகரிக்க வழிவகை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.