உடல்பருமன் குறைக்க சிகிச்சை பெற்ற இளம்பெண் மர்ம மரணம்

சென்னை: உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை பெற்ற இளம்பெண் ஒருவர் திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியையும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை, அவரது உடலை வீட்டு வாசலில் அனாதையாக விட்டுச் சென்றது பொதுமக்கள் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஓமலூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரின் மகளான பாக்யஸ்ரீ சேலத்தில் பொறியியல் படித்து வந்தார். இந்நிலையில் உடல் பருமனைக் குறைக்க தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்யஸ்ரீ, நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோருக்கு உரிய தகவல் அளிக்காத மருத்துவமனை நிர்வாகம், பாக்யஸ்ரீயின் உடலை எடுத்துச் சென்று அவரது வீட்டின் வாசலில் வீசிச் சென்றுள்ளது. இதையடுத்து பாக்யஸ்ரீயின் மர்ம மரணம் குறித்து விசாரிக்கக் கோரி அவரது பெற்றோர் வழக்குத் தொடுத்துள்ளனர்.