சுடச் சுடச் செய்திகள்

டெல்னா டேவிஸ்: ‘குரங்கு பொம்மை’ என் பெயர் சொல்லும்

எதிர்காலத்தில் நான் ஒரு அரசியல்வாதியாகவோ, வழக் கறிஞராகவோ அல்லது பத்திரி கையாளராகவோ வரலாம். இப்படி எந்நிலையில் நான் இருந்தாலும் அப்போது நான் ‘குரங்கு பொம்மை’ கதா நாயகி என்றுதான் என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு என் பெயர் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை இந்தப் படம் வாங்கித் தரும் என்று சொல்கிறார் டெல்னா டேவிஸ். சினிமாவில் நடிக்கும் ஆசை யின்றியே காலத்தின் சூழ்நிலை யில்தான் ஒரு நாயகி ஆகி விட்டதாகக் ‘குரங்கு பொம்மை’ பட நாயகி டெல்னா டேவிஸ் கூறியுள்ளார். பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குரங்கு பொம்மை’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் டெல்னா டேவிஸ். “எல்லோருக்கும் என் நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் என்று சொல்கிறேன் எனில் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி யாக நடித்து வருகிறேன். நான் ஒரு மலையாளி என்பதை உங்களுக்குத் தெரிவிக்கத்தான் அப்படி கூறியுள்ளேன்.