$13,400 தொகையை ஒப்படைத்த சீன தம்பதி

சீனாவின் வடக்குப்புற ஹிபெய் மாநிலத்தைச் சேர்ந்த சாங் யிதியன், 46, தன்னுடைய 18 வயது பெண் சாங் ஜியாசியை சிங்கப்பூரில் கேம்பிரிட்ஜ் நிகர் நிலை மற்றும் மேடைக்கலை பள்ளியில் மேல்படிப்புக்குச் சேர்த்திருக்கிறார்.

அந்தப் படிப்பில் சேர வேண்டுமானால் வெளிநாட்டு மாணவர் ஒருவரின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் குறைந்தது $60,000 இருக்கவேண்டும். இதற்காக திரு சாங் தம் மனைவியுடன் சிங்கப்பூருக்கு வந்து பீப்பிள்ஸ் பார்க் காம்பிளக்சில் இருக்கும் ஒரு பணமாற்றுக் கடையில் 207,300 சீன யுவான் நாணயத்தைக் கொடுத்து சிங்கப்பூர் டாலராக மாற்றினார்.

நாணய மாற்றுக் கடையிலிருந்த ஊழியர் தவறுதலாக 273,000 யுவான் என்று கணக்கிட்டு அந்தத் தம்பதியிடம் $55,600 தொகையைக் கொடுத்துவிட்டார். அந்தப் பணத்தை வங்கியில் சேர்த்துவிட்டு திரு சாங் தன் மனைவியுடன் சீனா சென்றுவிட் டார். பணமாற்றுக் கடைக்காரர் தன்னிடம் தவறுதலாக $13,400 தொகையை அதிகமாக கொடுத்து விட்டார் என்பது பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது.

சாங் தம்பதியர் அந்தப் பணத்துடன் சிங்கப்பூருக்கு திரும்பி வந்து பீப்பிள்ஸ் பார்க் காம்பி ளக்சில் உள்ள ‘கிரேண்ட் மணி சேஞ்சர்’ என்ற கடைக்குச் சென்று பணத்தைக் கடைக்காரரிடம் திருப்பி ஒப்படைத்தனர். இந்தச் செய்தி வெளியானதும் இணையத்தில் ஏராளமான மக்கள் இந்தத் தம்பதியைப் பாராட்டினர்.

“எனக்கும் என் மனைவிக்கும் ஆங்கிலம் தெரியாது. இந்த விவகாரம் இந்த அளவுக்குப் பெரிதாகப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பலரும் பாராட்டுவதாக என் புதல்வி தெரி வித்தார்,” என்று மாண்டரின் மொழியில் திரு சாங் கூறினார். அவருடைய புதல்வி குமாரி சாங் ஜியாசி, சிங்கப்பூரில் கடந்த ஐந்தாண்டு காலமாக தன் உற வினருடன் வசித்து வருகிறார். “என் பெற்றோரை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. அவர்களே எனக்கு முன்மாதிரி,” என்கிறார் குமாரி ஜியாசி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆபாசப் படங்களை விநியோகித்துக்கொண்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மின்னியல் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

19 Oct 2019

எஸ்ஜி நாசி லெமாக்: இருவர் மீது புதிய குற்றச்சாட்டு