சுடச் சுடச் செய்திகள்

பிரதமர்: உதவும் உலகமயம்

உலகமயம் சில நாடுகளில் அச்சத் தைக் கிளப்பிவிட்டு இருக்கிறது. உலகமயம் காரணமாக ஊழியர் களுக்கு வேலை போய்விடுகிறது என்று அந்த நாடுகளில் ஒரு வகை எண்ணம் நிலவுகிறது. ஆனால் சிங்கப்பூரை பொறுத்த வரை உலகமயம் புதுப்புது வேலை களை உருவாக்குகிறது என்றும் ஊழியர்களின் சம்பளம் உயர அது உதவுகிறது என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். உலகமயம் தழுவிய ஒரு நாடு என்ற முறையில் சிங்கப்பூர் இந்த வட்டாரத்திற்கும் உலகத்திற்கும் சேவையாற்றக்கூடிய நாடாகத் திகழ முடியும் என்பதே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார். “இப்படி செயல்படுவதன் மூலம் நமக்கு வேலை கிடைக்கும். அந்த வேலைகள் காரணமாக நம் மக் களில் பலருக்கு-ம் நல்ல சம்பளம் கிடைக்கும்,” என்று திரு லீ தெரி வித்தார். ஆஸ்திரேலியாவின் ஏபிசி ரேடியோ நேஷனல் நிறுவனத்திற்கு சனிக்கிழமை திரு லீ பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி அறிக் கையை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டது.

ஆசியாவில் சக்தி சமநிலை மாற்றங்கள், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, பயங்கரவாத மிரட்டல், எதிர்காலப் பொருளிய லுக்கு சிங்கப்பூர் ஆயத்தமாகிவரும் முறை முதலான பல அம்சங்கள் பற்றியும் அந்தப் பேட்டியில் திரு லீ கருத்துத் தெரிவித்தார். தொழில்நுட்பம் என்பது வேலைகளை உருவாக்கும் என்று நம் பிக்கை தெரிவித்த திரு லீ, அவை எந்த வகை வேலைகளை உருவாக்கும் என்பதும் மக்களின் விருப்பங்களை அவை நிறைவேற்றுமா என்பதும் இதில் முக்கியமானவை என்றார். அதோடு, அத்தகைய வேலை களுக்கு மக்களை ஆயத்தப்படுத்த முடியுமா என்பதும் முக்கியம் என்று திரு லீ குறிப்பிட்டார். இதற்குப் போதிய பணம் இருந்தால் மட்டும் போதாது என்றும் இவற்றைச் செய்து முடிக்க மூன்று அம்சங்கள் முக்கியமானவை என்றும் திரு லீ தெரிவித்தார்.