சுடச் சுடச் செய்திகள்

கவிழ்ந்த வேனில் சிக்கினார்

காமன்வெல்த் அவென்யூவில் ஒரு வேன் கவிழ்ந்துவிட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் சுயநினைவை இழந்து வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டார். அப்போது அந்த வழியேபோன ஒருவரும் செய்தி யாளர் ஒருவரும் அவரைக் காப் பாற்றினர். வேனை ஓட்டிச்சென்ற 49 வயது ஆடவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துவிட்ட தால் வாகனம் ஒரு மரத்தில் மோதி கவிழ்ந்துவிட்டதாக ‌ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

வெள்ளிக் கிழமை பிற்பகல் சுமார் 12.10 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த இடத்தில் இருந்த ரென் சி என்ற ‌ஷின் மின் செய்தித்தாள் செய்தியாளர் உடனே உதவிக்கு விரைந்தார். பக்கத்தில் வேலைசெய்யும் திரு சூ என்பவரும் பிறகு இதர பலரும் உதவிசெய்தனர். வேன் ஓட்டுநர் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலிஸ் புலன் விசாரணை நடக்கிறது.

மற்றவர்களுடன் சேர்ந்து ‌ஷின் மின் செய்தியாளர் ரென் சி (நீல உடை) வேனில் மாட்டிக்கொண்டவரை காப்பாற்று கிறார். படம்: ‌ஷின் மின் டெய்லி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon