நடைபாதையில் லாரி ஏறி மூவர் காயம்

சிலிகி சாலையில் ஆனந்த பவன் விநியோக லாரி ஒன்று நேற்று முன் தினம் பிற்பகலில் நடைபாதை மீது ஏறி அங்கு நின்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதிய சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். சிராங்கூன் சாலையை நோக்கிச் செல்லும் சிலிகி சாலையில் லாரி ஒன்றுக்கும் மூன்று பாதசாரிகளுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தமக்கு 3.38 மணிக்குத் தகவல் வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் போலிஸ் தெரிவித்தது.

இதில் காயமடைந்த 21 வயதுக் கும் 57 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பேர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகே வசிக்கும் திரு செங் என்ற குடியிருப்பாளர், திடீரென்று பெரிய சத்தம் கேட்டதாகவும் தன் வீட்டு சன்னலிலிருந்து என்ன நடந்தது என்று எட்டிப் பார்த்ததாக வும் ‌ஷின் மின் சீன நாளிதழிடம் நேற்று தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மாதுக்கு சிகிச்சை. படம்: ‌ஷின் மின் நாளிதழ் வாசகர்