முதியோருக்கான இணையத்தளம் துவக்கம்

சிங்கப்பூரில் உள்ள முதியவர்கள், கையடக்கச் செல்பேசிச் சாதனங் கள், செயலிகள், இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் தகவல்தொழில்நுட்பத் தேர்ச்சி களைக் கற்றுக்கொள்ள உதவு வதற்காக நேற்று ஒரு புதிய இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ‘ஐஎம் சில்வர்’ என்று குறிப் பிடப்படும் அந்தக் களஞ்சியம் கையடக்கச் சாதனங்கள் மற்றும் மின்னிலக்க தொழில்நுட்பங்களின் அனுகூலத்தை முதியோர் பெறவும் அவற்றைக் கற்றுக் கொள்ளவும் ஏராளமான புத்தகங்க ளை யும் வழிகாட்டி நெறிமுறை களையும் காணொளிகளையும் ஆய்வரங்கு தொகுப்புகளையும் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் முழுவதும் வகுப் பறையில் போதிக்கப்படும் தகவல் தொழில்நுட்ப போதனை களுக்கு உறுதுணையாக இந்த இணையத் தளம் இருக்கும். தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் இந்த இணையத் தளத்தை உரு வாக்கி இருக்கிறது. தொடர்பு தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் நேற்று ‘சில்வர் ஐடி’ விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

Loading...
Load next