பிரிட்டிஷ்- அரசியலை நிலைகுலைய வைத்த பிரதமர்

பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் தெரேசா மே அரசியலில் தடுமாறி விழுந்துவிட்டார். தப்புக்கணக்கு போட்டுவிட்டார். தான் விழுந்ததோடு அல்லாமல் நன்றாக இருந்த நாடாளுமன்றத்தை தொங்கு நாடாளுமன்றமாக ஆக்கி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர் லாந்து ஆகியவை அடங்கிய பிரிட்டிஷ் நாடாளுமன்றத் துக்கு மூன்று ஆண்டுகள் முன்னதாகவே அவர் நடத்திய தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்கெனவே இருந்த ஆதரவும் போய்விட்டது. 2015ல் நடந்த தேர்தலில் 650 இடங்களில் 331 இடங்களைப் பிடித்து பெரும்பான்மை யுடன் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் பலம் இப்போது 318 ஆகக் குறைந்து பெரும்பான்மை போய்விட்டது. அதே வேளையில், சென்ற தேர்தலில் 232 இடங்களைப் பிடித்து இருந்த தொழிற்கட்சி, இந்தத் தேர்தலில் 261 இடங்களைக் கைப்பற்றிவிட்டது.

பிரிட்டனில் 2015ல் நடந்த தேர்தலின்போது, 27 நாடு களைக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருந்துவரவேண்டும் என்று வலியுறுத்திவந்த கன்சர்வேட்டிவ் கட்சி, அதன் தொடர்பில் மக்களின் கருத்தை திரட்டப்போவதாக பிரசாரத்தில் குறிப்பிட்டது. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

பிரதமராக டேவிட் கேமரன் பொறுப்பு ஏற்றார். பிரிட்டன் பிரியவேண் டும் என்று பெரும்பான்மை மக்கள் பொதுவாக்கெடுப்பில் முடிவு செய்ததையடுத்து பிரதமர் பதவியை கேமரன் துறந்தார். அதன் காரணமாக மே அம்மையார் 2016 ஜூலை 13ஆம் தேதி பிரதமரானார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் 2019 மார்ச் சில் விலகப் போகிறது. அதன் தொடர்பில் அந்த ஒன்றியத் துடன் ஜூன் 19ஆம் தேதி தொடங்க இருக்கும் பேச்சு வார்த்தை களில் பிரிட்டன் தனக்குப் பல அனுகூலங் களைப் பெற வேண்டுமானால் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கன்சர் வேட்டிவ் கட்சிக்கு அசுர பலம் வேண்டும் என்று கூறி, 2020ல் நடக்க இருக்கும் தேர்தலை இப்போதே நடத்தப் போகிறேன் என்று தெரிவித்து, நாடாளுமன்றத்தில் அதற் கான மசோதாவைப் பிரதமர் மே தாக்கல் செய்தார்.

அதன் மீது கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கெடுப்பு நடந்தது. 522 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 13 பேர் எதிர்த்தனர். ஜூன் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. நாட்டில் முதியோரைப் பராமரிக்க ஆகும் செலவை, அவரின் மரணத்துக்குப் பிறகு அவரின் சொத்துகளை விற்று பெறுவது என்ற யோசனை, மாணவர்களுக்கான இலவச பள்ளிக்கூட உணவுத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தும் சர்ச்சைக்குரிய திட்டம் முதலானவற்றை செலவு குறைப்பு நடவடிக்கையாக கன்சர்வேட்டிவ் கட்சி, தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தது. பிரிட்டனுக்குப் பயங்கரவாத மிரட்டல்கள் இருந்தாலும்கூட 20,000 போலிஸ் அதிகாரி களை வேலையில் இருந்து நீக்கி செலவைக் குறைத்தது கன்சர்வேட்டிவ் கட்சி.

இப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் பிரிட்டனில் பயங்கர வாத சம்வங்கள் அரங்கேறின. இவை எல்லாம் அரசியலில் பிரதமருக்கு எதிராக வாக்குகளைத் திருப்பிவிட்டன. 1929ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனில் இப்போது மூன்றாவது தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது.

பெரும்பான்மை இல்லை என்றாலும் நாடாளுமன்றத்தில் ஆகப்பெரிய கட்சியாக கன்சர்வேட்டிவ் கட்சியே இருக் கிறது. கூட்டணி ஆட்சி அமைத்து நாட்டுக்குச் சேவை யாற்ற தான் தயார் என்று முக்கிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அறிவித்தாலும் அதற்கு இடம் தராமல், 10 இடங்களைக் கொண்டுள்ள வடக்கு அயர்லாந்தின் டியூபி என்ற கட்சியுடன் சேர்ந்து பிரதமர் மே ஆட்சி அமைக்கக் கிளம்பிவிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச அசுர பலம் தேவை எனக்கேட்டு அவசரப்பட்டு தேர்தலை நடத்திய பிரதமர் மே, எட்டாக்கனிக்கு ஆசைப்பட்டு இருந்ததையும் இழந்து நிற்கிறார். இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை தாமதமடையும். பேச்சில் பிரிட்டனின் செல்வாக்கு மங்கக்கூடும். அந்த ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டுமா என்பது பற்றி மறுபடியும் பொது கருத்தெடுப்பு நடந்தாலும் நடக்கக்கூடும். இந்தப் பேச்சு ஒருபுறம், சரியில்லாத பொருளியல் நில வரங்கள், வேலையின்மை விகிதம் அதிகரிப்பு, பயங்கர வாதத் தாக்குதல்கள் முதலானவை மறுபுறம் என்று பிரிட்டன் பெரும் சங்கடத்தில் சிக்கி இருக்கும் ஒரு நேரத் தில், அவசரப்பட்டு தேர்தலை நடத்தி பிரிட்டஷ் அரசியலை பிரதமர் மே நிலை குலையச் செய்துவிட்டதாகவே சொல்லத் தோன்றுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!