சுடச் சுடச் செய்திகள்

மூப்படையும் மக்கள்தொகையால் எதிர்நோக்கப்படும் சவால்

மூப்படைந்துவரும் மக்கள்தொகை யின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ரத்தத்திற்கான தேவை கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு 111,633 யூனிட்டு கள் ரத்தம் பயன்படுத்தப் பட்டன. இந்த எண்ணிக்கை 2011ல் இருந்த 95,100ஐவிட 17 விழுக் காடு அதிகம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் வெளியிட் டுள்ள தகவல்கள் காட்டு கின்றன. இருப்பினும், சேகரிக்கப்பட்ட ரத்தத்தின் அளவு 10 விழுக்காடு என்ற மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டு 115,976 யூனிட்டு களை எட்டியது. அது 2011ல் 104,895 யூனிட்டுகளாக இருந்தது. தேசிய ரத்த சூழலுக்கு மூப் படைந் துவரும் மக்கள்தொகை கொடுக்கும் சவாலே இந்த நிலைக்குக் காரணமாக இருக் கிறது என்று சிங்கப்பூர் செஞ்சி லுவை சங்கம் தெரிவித்துள்ளது.

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு அடிக்கடி ரத்த தானம் செய்பவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க சிங்கப்பூர் விளை யாட்டு மையத்தில் நேற்று நடந்தே றிய விருது நிகழ்ச்சி ஒன்றில் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டார். “ஒருபுறம், மூப்படைந்துவரும் மக்கள்தொகையினால் ரத்தத்திற் கான தேவை அதிகரிக்கும். மூத்தோ ர் இதய நோய், பக்கவாதம் போன்ற வயது தொடர்புடைய நோய்களுக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம். இதனால் கூடுதலான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவ ரத்தத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.

“மற்றொருபுறம், ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். காரணம், அடிக் கடி தானம் செய்பவர்களுக்கு வயதா கும்போது உடல்நலம் குன்றும். அப்போது அவர்களால் இனி ரத்த தானம் செய்ய இயலாது,” என்றார் அவர். இதுவரை 200க்கும் அதிக மான முறை ரத்த தானம் செய்த 13 பேருக்கு ‘மெடல் ஆஃப் லைஃப்’ எனும் விருதைத் திரு கான் வழங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளில், சராசரியாக 600 பேர் ஒவ்வோர் ஆண்டும் வயது தொடர்புடைய நோய்களினால் ரத்த தானம் செய் வதை நிறுத்திக்கொண்டனர்.