சுடச் சுடச் செய்திகள்

மணல் தட்டுப்பாட்டால் செம்மண்ணில் கட்டுமானப் பணிகள்

சென்னை: அளவுக்கு அதிகமாக மணல்கள் தோண்டியெடுக்கப்பட்டதால் 10 மணல் குவாரிகள் கைவிடப்பட்டன. இவற்றுக்கு மாற்றாக புதிய மணல் குவாரிகள் திறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கட்டுமான மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு லாரி மணல் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை விற்கப்படுவதால் ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் (எம்.சேன்ட்) பயன்பாடு அதிகரித்தது. செயற்கை மண்ணின் தேவை அதி கரிப்பைத் தொடர்ந்து விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு யூனிட் வெறும் 2,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட செயற்கை மணல் இப்போது 3,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கட்டுமான நிறுவனத்தினர் அதற்கும் மாற்று கண்டுபிடித்திருக்கிறார்கள். செம்மண் போல செந்நிற மணலை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து கட்டுமானத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இந்த மண் பயன் பாடு அதிகளவில் உள்ளது. அரசுக் கட்டடங்களுக்கு வேறு வழி யின்றி இந்த மண்ணையே பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக, மதுரை ஒத்தக் கடையில் உள்ள விவசாயக் கல்லூரியைச் சுற்றி சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளுக்கு இந்த மணல் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து பொறியாளர் ஒருவரிடம் கேட்ட போது, “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக விலை உயரவே உயராத ஒரு பொருள் என்றால் அது ஆற்று மணல்தான். 2008 முதல் இன்று வரையில் இரண்டு யூனிட் மணல் விலை 625 ரூபாய்தான். அரசு நிர்ணயித்த விலையில் தான் மாற்றமில்லை. ஆனால், இடையில் தரகர்கள் அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர்.

சாலையோரம் கட்டப்படும் சுற்றுச் சுவர் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் செம்மண். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon