டிரம்ப்: ஜேம்ஸ் கோமி சொல்வது பொய்

வா‌ஷிங்டன்: அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமி பொய் சொல்வதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள் ளார். வெள்ளை மாளிகையில் தாங்கள் சந்தித்துப் பேசியபோது நடந்த உரையாடல்களைப் பற்றி அவர் பொய் சொல்கிறார் என்று திரு டிரம்ப் கூறினார். கோமியிடம் தான் விசுவாசத்தை எதிர்பார்க்க வில்லை என்றும் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணையில் வெள்ளை மாளிகை முன்னாள் ஆலோசகர் மீதான விசார ணையை மத்திய புலனாய்வுத் துறை கைவிட வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். தங்களுக்கு இடையில் நடந்த உரையாடல்களைப் பற்றி சத்தியப் பிரமாணம் செய்து சாட்சியம் அளிக்க 100 விழுக்காடு தாம் விருப்பம் கொண்டிருப்பதாகவும் திரு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க நாடாளுமன்றக் குழு, அவ்விருவருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் பற்றிய ஒலிநாடா உள்ளனவா என்று கேட்டுள்ளது.

முன்னதாக திரு கோமி, நாடாளுமன்றக் குழு முன் னிலையில் வியாழக்கிழமை சாட்சியம் அளித்த போது ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணையை தான் மேற்கொண்டு வந்ததாலேயே பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதாகக் கூறி னார். அமெரிக்காவில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான திரு டிரம்ப்பை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்தில் அமெரிக்கத் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படுகிறது. இக்குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் டிரம்ப்பின் பிரசாரக் குழுவினருக் கும் ரஷ்ய அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!