சட்டவிரோத குடியேறிகள் 38 பேரை கைது செய்தது மலேசியா

கோலாலம்பூர்: மலேசியாவைவிட்டு வெளியேற முயன்ற சட்டவிரோத குடியேறிகள் 38 பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். கோலா சுங்கை பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தோனீசியாவை நோக்கிப் புறப்பபடவிருந்த ஒரு படகில் சென்ற சட்டவிரோதக் குடியேறிகள் 38 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தக் கள்ளக்குடியேறிகள் 20 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. படகோட்டியும் சிப்பந்தி ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். கோலா சுங்கை கடல் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்தப் படகை வழிமறித்து சோதனை செய்தபோது அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது என்று உயர் அதிகாரி கூறினார்.

Loading...
Load next