உள்ளூர் படைப்புகளை மொழிபெயர்க்க அழைப்பு

பல்லினக் கலாசாரம் மிகுந்துள்ள சிங்கப்பூரில் பிற இனத்தவரது கலாசாரங்களைப் புரிந்துகொள்ள அவர்களது படைப்புகள் பெரிதும் உதவுகின்றன. அவற்றைப் புரிந்துகொள்வ தற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அதனை உறுதிப்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலம், மாண்டரின், மலாய் போன்ற மொழிகளில் இருக்கும் உள்ளூர் படைப்பாளிகளின் கவிதைகள், சிறுகதைகள், நாவல், நாடகம், அறிவியல் புனைவுகள் போன்ற பல்வேறு படைப்புகளை மேற் கூறிய நான்கு மொழிகளுக்குள் ஏதாவதொன்றில் மொழிபெயர்த்து உங்களது படைப்புகளை அனுப்ப லாம். செப்டம்பர் மாதம் ‘மொழி பெயர்ப்பு மாத’மாகக் கொண்டா டப்பட உள்ளது.

சிறந்த மொழிபெயர்ப்புப் படைப்புகள் மொழிபெயர்ப்பு மாதத்தில் காட் சிக்கு வைக்கப்படும். நியூயார்க் கில் நடைபெறும் தேசிய மொழி பெயர்ப்பு மாத நிகழ்ச்சியிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் படைப்புகளும் மூலப் படைப்பு களும் காட்சிப்படுத்தப்படும். உங்களது மொழிபெயர்ப்புப் படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் இம்மாதம் 12ஆம் தேதி. இது குறித்த மேல் விவரங் களுக்கு www.selectcentre. org என்ற இணையத்தளத்தை நாடலாம்.