மருதாணி உள்ளிட்ட அலங்கார சேவைகள்

கேலாங் சந்தையில் அலங்கார சேவைகளும் வழங்கப்படுகின்றன. திருமதி பிரியா, 30, கடந்த ஐந்து ஆண்டுகளாக மருதாணி இடும் சேவைகளை இங்கு வழங்கி வருகிறார். வழக்கமாக ஒரு சிறு இடத்தில் வழங்கிய இந்த சேவையைக் கடந்த ஆண்டுகளில் மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றதால் இந்த ஆண்டு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து வியாபாரத்தை நடத்திவருகிறார். ‘இணை செலூப்’ என்ற புதிய வகையான நகங்களுக்கான மருதாணி இவருடைய கடையில் விற்கப்படுவதாலும் வாடிக்கையாளர்கள் அதை அதிகம் வாங்குவதாலும் வியாபாரம் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது என்று கூறினார் அவர். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் வணிகம் படித்த திருமதி பிரியா தன்னுடைய சொந்த ஆர்வத்தில் மருதாணி தொழிலில் இறங்கி இப்பொழுது முழு நேர மருதாணிக் கலைஞராக பணி புரிந்து வருகிறார்.