நம்பமுடியாத வெற்றியை ருசித்த பங்ளாதேஷ்

கார்டிஃப்: சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியை பங்ளா தேஷ் வெளியேற்றி உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பங்ளா தேஷ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியது. பங்ளாதேஷ் அணியின் ஷாகிப் அல் ஹசான், மஹ் முதுல்லா ஆகியோர் சதங்களை அடித்து நியூசிலாந்தின் தோல் விக்கு வித்திட்டனர். நியூசிலாந்து முதலில் பந்தடித்து 265 ஓட்டங்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து பந்தடித்த பங்ளாதேஷ் முதலில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் டுகளையும் பிறகு 33 ஓட்டங் களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பங்ளாதேஷ் தோல்வி அடையும் என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த எழுச்சிகளில் ஒன்றாகக் கருதப் படும் வெற்றியை பங்ளாதேஷ் எட்டியது. ஷாகிப் அல் ஹசான் 114 ஓட்டங்களும் மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங் களும் எடுத்தனர்.

வெற்றியைக் கொண்டாடும் பங்ளாதேஷ் வீரர்கள். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next