சுடச் சுடச் செய்திகள்

ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி

செயிண்ட் லூசியா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடு கிறது. இதில் முதல் போட்டி நேற்று முன்தினம் செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்தடித்தது. அவ்வணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 212 ஓட்டங்கள் எடுத்தது. ஜாவித் ஆட்டி 81 ஓட்டங்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஆப்கானிய சுழற்பந்து வீச்சாளர் ர‌ஷித் கானின் அபாரப் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி திக்குமுக்காடியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ர‌ஷித் கான் 8.4 ஓவர்களில் 18 ஓட்டங்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் 63 ஓட்டடங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் வீரர் ர‌ஷீத் கான் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon