விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை: வறட்சி நிவாரணம், ஓய்வூதியம் குறித்த தங்களின் கோரிக்கைகளை முதல்வர் பரி சீலனை செய்வதாகக் கூறியுள்ளார் என அய்யாக்கண்ணு கூறினார். அதனை யொட்டி போராட்டத்தைத் தற்காலிகமாக மீட்டுக் கொள்வ தாக விவசாயிகள் அறிவித்துள்ள னர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி யைத் தேசிய தென்னிந்திய நதி கள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார். விவ சாயிகளின் கோரிக்கை தொடர் பாக முதலமைச்சருடன் அய்யாக் கண்ணு பேச்சுவார்த்தை நடத்தி னார்.

முதல்வர் உடனான சந்திப்புக் குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், கரும்பு நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முதல்வரி டம் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் விவசாயக் கடன்களுக்காக வங்கி களில் அடகு வைக்கப்பட்ட நகை கள் ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும் எனவும் முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதையும் முதல்வர் பரிசீலிப்பதாகக் கூறினார்.

“அத்திக்கடவு அவினாசி திட் டத்தை நிறைவேற்றுவேன் என்றும் அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளு வதற்கு முதல்வர் அனுமதி அளித் துள்ளதாகவும் கூறினார். போராட் டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி களிடம் இது பற்றி தெரிவிப்பேன்,” என்றும் அய்யாக்கண்ணு கூறி னார். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்க ளைத் தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய் யாக்

கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் பகுதியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினர். அதை வலியுறுத்தி சேப்பாக்கத் தில் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டு நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனையொட்டி நடந்த முதல் வருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத் துப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

வறட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு நாட்களாகப் போராடினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, முதல்வரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் விவரிக்கிறார். படம்: தமிழக ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

23 Jul 2019

கேரளாவில் கனமழைக்கு எட்டு பேர் பலி

கட்சித் தலைவரின் கருத்துக்கு மதிப்பளித்து கார் பரிசை தான் ஏற்றுக்கொள்ள மறுத்த கேரள மாநிலத்தின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ். படம்: ஊடகம்

23 Jul 2019

தொண்டர்களின் கார் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள கேரள எம்.பி. மறுப்பு