சுடச் சுடச் செய்திகள்

பெருநாளுக்காக களைகட்டும் கேலாங் சந்தை

அனன்யா ரவிச்சந்திரன்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கேலாங் சந்தையில் இறால் வடை விற்று வரும் திருமதி ஜமுனா ராணியுடைய வாழ்வாதாரமே வடை விற்பனைதான். நான்கு பிள்ளைகளுக்குத் தாயான இவர் சிறு வயதிலிருந்தே தன்னுடைய தாயாருக்கு வடை விற்பனையில் உதவ ஆரம்பித்து ‘பசார் மாளம்’ களிலும், மற்ற சந்தைகளிலும் உளுந்து வடை, பருப்பு வடை என வித விதமான வடைகளை விற்று வருகிறார். வர்த்தகம் மந்தமாக இருந்த காரணத்தாலும் அவருடைய வியா பாரத்தில் அவருக்குத் துணையாக இருந்த கணவரின் மறைவாலும் அவர் சிறிது காலத்திற்கு வடை விற்பனையைத் தாற்காலிகமாக நிறுத்தியிருந்தார்.

திருமதி ராணியின் விற் பனையை மீண்டும் தொடங்கி வைக்க பெரும் உதவியாக இருந் தது அவரது மகன் திரு. சூரியா. பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்று வந்த சூரியா போதிய பண வசதி இல்லாத காரணத்தால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டுத் தன்னுடைய தாயாருக்கு முழு நேரமாக விற்பனையில் உதவினார். தாயார் செலவுகளைச் சமாளிக்க சிரமப்பட்டதால் வடை விற்பனையை நடத்துவதில் முழுப் பொறுப்பை ஏற்று தன்னுடைய சொந்த விற்பனை உத்திகளை பயன்படுத்தி புதிய வடை வகைகளை அறிமுகப்படுத்தினார் சூரியா.

புத்தாக்கத்திறனைப் பயன்படுத்தி ‘சாக்லேட் வடை’, ‘சீஸ் வடை’, ‘பேரீச்சம்பழச் சாறு வடை’ எனப் புதுப்புது வகையிலான வடைகளை வியாபாரத்திற்குக் கொண்டு வந்து அவரது தாயார் ஜமுனா ராணியின் வியாபாரத்தைப் பெருக்க உதவுகிறார் சூரியா. படம்: நிலா கோவிந்தராஜு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon