சுடச் சுடச் செய்திகள்

தான்யாவின் தன்னம்பிக்கை

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடித்த மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழிப் பேத்தி தான்யா ரவிச்சந்தின். இவர் சசிகுமார் நடித்த ‘பலே வெள் ளையத் தேவா’ படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் என்பது தெரிந்த சங்கதிதான். ‘பிருந்தாவனம்’ படத்திலும் நடித்திருந்தார். அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தனது வாழ்க்கைப் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் தான்யா. “நான் கலைக் குடும்ப வாரிசு என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். கடந்த ஆண்டுதான் நடிப்புத் துறையில் கால் பதித்தேன். “இதுவரை இரண்டு படங்களில் நடித்திருக் கிறேன். எல்லாரையும் போல் நானும் திரைத் துறையில் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை யுடனும் பல கற்பனைகளு டனும் வந்தேன்.

“திரையுலகம் என்பது வித்தியாசமானது. நாம் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். நம் மன தில் எண்ணற்ற எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால் நாம் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது திரைத் துறைதான். “அதனால் தான் நான் மிக வும் கவனமாக இருக்கிறேன். எதைச் செய்தாலும் நிதானமாக யோசித்து முடிவெடுக்கிறேன். கடந்த ஆண்டுதான் நடிக்கத் தொடங்கினேன். ஆரம் பத்திலேயே நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அனைத்தையும் ஏற்கவில்லை. நல்ல கதை, எனக்கான கதாபாத்திரம் அனைத்தையும் நன்றாக கேட்டறிந்து, அதில் எனக்கு எது சரியாக அமையும் என ஆராய்ந்தபின்தான் வாய்ப்புகளை ஏற்கிறேன்.

“படப்பிடிப்புத் தளத்துக்கு வரும் முன்னர், என் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வேன். பின் அந்தப் பாத்திரமாகவே என்னை மாற்றிக் கொள்வேன். அதனால்தான் என்னால் சுலபமாகவும் யதார்த்தமாகவும் நடிக்க முடிகிறது.”

உங்கள் முதல் படம் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லையே?

“வணிக ரீதியில் எதிர்பார்த்த வசூல் கிடைக்க வில்லை என்றால் அது தோல்விப் படமா? என்னைப் பொறுத்தவரையில் அது தவறான கருத்து. அப்படம் வெளியானதும் எனது கதாபாத்திரம் பலராலும் பரவலாகப் பேசப்பட்டது. பலரது பாராட்டுகளும் கிடைத்தன. அதனால் எனக்கு அது வெற்றிதான். “இன்னும் சொல்லப்போனால், ‘பிருந்தாவனம்’ தான் எனது முதல் படம். அப்படத்தில் நடிக்கும் போதுதான் எனக்கு ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றி, தோல்வி பற்றி நினைத்து ஒரு நடிகை கவலைப்படக் கூடாது. தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை மேலும் மெருமேற்றி நடிப்பதுதான் ஒரு நடிகையின் வேலை என நான் நினைக்கிறேன்.

“தற்போது பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியானபின், நான் இன்னும் பிரபலமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது,” என கண்களைச் சிமிட்டி உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் சொல்கிறார் இளம்நாயகி தான்யா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon