‘சாவி’

இயக்குநர் பிரபுசாலமனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சுரேஷ் சந்திரா தற்போது கதா நாயகன் அவதாரம் எடுத்திருக் கிறார். அவர் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘சாவி’. படத்தின் தயாரிப்பாளரும் சுரேஷ் சந்திரன்தான். ‘அபியும் நானும்’ படத்திற்கு வசனம் எழுதிய இரா.சுப்பிரமணியன் இப்படத்தை இயக்குகிறார். பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைப் பது தவறு என்பதை எடுத்துச் சொல்லப்போகிறதாம் ‘சாவி’. “பொருளாதாரத்தில் பின் னோக்கி இருந்தாலும் பலர் நிம்மதியாகத்தான் வாழ்கிறார்கள். பண பலம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

இது தவறான கருத்து. “கைநிறைய பணம் இருந்தால் நிம்மதியாக வாழலாம் என்பது சிலரது நினைப்பாக இருக்கிறது. அதனால் பணம் ஈட்டும் ஆசையில், சிலர் தடம் மாறி தவறான பாதையில் செல்கிறார்கள். “இந்த தவறான போக்கால் மன நிம்மதி பறிபோய்விடும் என்ற கருத்தைத்தான் இப்படத்தில் யதார்த்தமாகவும் அழுத்த மாகவும் பதிவு செய்துள்ளோம். “கதையின் நாயகன் சாவி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டி ருப்பவர். நாயகி ஒரு கடையில் வேலை பார்ப்பவர். “நேர்மையாக வாழும் இந்த நாயகனின் வாழ்க்கையில் எதிர் பாராத வகையில் ஒரு சிக்கல் முளைக்கிறது. அது அவரது நேர்மைக்கான சவாலாக உள்ளது. அதை அவர் எப்படி வெல்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக் கதை மூலம் அழகாகப் படமாக்கி உள்ளோம்.

“படத்தின் கதாநாயகியாக நடிப்பவரும் புதுமுகமே. அவர் கேரளாவில் இருந்து வந்திருக்கும் சுனுலட்சுமி. கவிஞர் நந்தலாலா இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். சதீஷ் தாயன்பன் என்பவரின் இசையில் பாடல்கள் பதிவாகி உள்ளன. “இக்காலகட்டத்திற்கு ஏற்ப முக்கிய கருத்தை இப்படத்தில் ஜனரஞ்சகமாகப் படமாக்கி உள்ளோம். “இப்படம் நிச்சயம் மக்களின் ஆதரவைப் பெறும் என நம்பு கிறோம்,” என்கிறார் இயக்குநர் இரா.சுப்பிரமணியன். இப்படத்துக்கு சேகர்ராம் இசையமைப்பதுடன் ஒளிப்பதிவுப் பணியையும் கவனிக்கிறார். விரைவில் திரை காண உள்ளது ‘சாவி’.

‘சாவி’ படத்தின் ஒரு காட்சியில் சுரேஷ் சந்திரா, சுனுலட்சுமி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ‘96’ தெலுங்கு படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் “படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால்விடும் மற்றொரு முக்கியமான படம் இது. இந்தப் படத்தின் கதாபாத்திரமும் எனக்கு சவாலாகவே இருந்தது. 

15 Oct 2019

‘எனக்கு சவாலான படமாக இருந்தது’

கடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவருகிறார் சசிகுமார். படம்: ஊடகம்

15 Oct 2019

கடனை அடைக்க 8 படங்களில் இடைவிடாது நடிக்கும் சசிகுமார்