சுடச் சுடச் செய்திகள்

‘பள்ளிப்பருவத்திலே’

தந்தை, மகனுக்கு இடையே யான உறவுதான் ஒருவரது வாழ்க் கைக்கு ஏற்றத்தையும் உண் மையான அர்த்தத்தையும் தரும் என்ற கருத்தை வலியுறுத்தி, அதைப் படமாக்கி உள்ளார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர். ‘பள்ளிப்பருவத்திலே’ என்று தலைப்பிட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகன், இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம். எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி திகில், அடிதடி போன்ற பரபரப்பான விஷயங்கள் இன்றி, அமைதியான, யதார்த்தமான, அதே சமயம் இந்த காலகட்டத் துக்குத் தேவையான கதையைச் சொல்லப்போவதாகக் கூறுகிறார் வாசுதேவ் பாஸ்கர். “எனது சொந்த வாழ்க்கையை முதலில் அசைபோட்டுப் பார்த் தேன்.

தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் ஆம்பலாப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான். அங்கு நான் பயின்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் சாரங்கன். ராணுவ வீரர் போல மிகவும் கண்டிப்பான வர். பள்ளியில் மிகவும் கண்டிப் பாக நடந்துகொள்வார். அதே சம யம் அவரது மகனுடனான உற வைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். மகனுடன் கண்டிப்பாக வும் இருப்பார்,

தேவையான சுதந்திரமும் தருவார். “இந்த உண்மைக் கதையை அப்படியே திரைக்கதையாக்கி விட்டேன். சிறு வயதில் பெற்றோ ரின் உதவியையும் தயவையும் எதிர்பார்க்கும் பிள்ளைகள், வளர்ந்த பின்னரும் அப்படியே இருக்க விரும்புவதில்லை. இக் காலத்து இளைஞர்கள் தன் தந்தையை ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். தவறான வழியில் செல்லும் ஒரு மகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையேயான போராட்டமும் அதன் விளைவும் தான் இப்படம். தந்தை மகன் உறவு மேன்மையானது என்ற கருத்தை மனதிலும் பதியும் வகை யில் கூறியிருக்கிறோம்,” என்கி றார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்.

‘பள்ளிப் பருவத்திலே’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon