சுடச் சுடச் செய்திகள்

முன்னாள் காதலரை மின்தூக்கியில் கத்தியால் குத்திய பெண்

தமது முன்னாள் காதலரைப் பெண் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் அங் மோ கியோ அவென்யூ 3 புளோக் 203ல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கத்தியால் குத்தப்பட்ட ஆடவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே சம்பவத்துக்கு முன்பு கடுமையான வாக்குவாதம் நிலவியதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். இருவரும் அண்மையில் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

தங்களுக்கிடையிலான நட்பு தொடரவேண்டும் என்று அந்தப் பெண் கேட்டுக்கொண்டதாகவும் அதை அந்த ஆடவர் மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் அவரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. அந்த ஆடவருக்கு இடது கரத்திலும் முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன. அந்தப் பெண் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக ‌ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது. ஆனால் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது குறித்து தமக்குத் தெரியாது என்று அந்த ஆடவர் தெரிவித்தார். போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon