சுடச் சுடச் செய்திகள்

பிராடல் மேம்பாலச்சாலை அதிகாரபூர்வ திறப்பு

பிராடல் மேம்பாலச்சாலை நேற்று காலை அதிகாரபூர்வமாக திறக்கப் பட்டுள்ளது. பிராடல் மேம்பாலச் சாலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அதன் திறப்பு மூன்று முறை தடைப்பட்டது. இந்தத் தாமதங்களுக்குப் பிறகு அது நேற்று போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. பிராடல் மேம்பாலச்சாலைக்கான கட்டுமானப் பணிகளை ஏற்று நடத்த 2012ஆம் ஆண்டில் ஹெச்சாகுரூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் கட்டுமானப் பணிகள் கைவிடப் பட்டன. அதனைத் தொடர்ந்து பிராடல் மேம்பாலச்சாலையைக் கட்டி முடிக்க ஃபெங் மிங் கட்டுமான நிறுவனத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் நியமித்தது. கட்டு மானப் பணிகள் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் கட்டுமானப் பணிகளின் நிறைவு கடந்த ஆண்டிறுதிக்கு ஒத்திவைக் கப்பட்டது. இந்த இலக்கும் எட்டமுடியாமல் போனது. இதற்குச் சில சிரமமிக்க சூழ்நிலைகள் காரணமென தெரி விக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மேம் பாலச்சாலை கட்டுமானத் தளத் தில் நடத்தப்பட்ட சோதனை யின்போது சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. இதனால் கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. இதன் விளைவாக மேம்பாலச்சாலையின் திறப்பு தொடர்ந்து தடைப்பட்டது.

பிராடல் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்டுள்ள பிராடல் மேம்பாலச்சாலை. புதிய மேம்பாலச் சாலைக்கு பிராடல் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர் களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon