நாட்டின் கொடியைத் தாங்கிச் சென்ற ஹெலிகாப்டரில் பயணம்

தேசிய தின அணிவகுப்பு ஒத் திகையின்போது நாட்டின் கொடி யைத் தாங்கிச் செல்லும் சிங்கப்பூர் ஆகாயப்படை ஹெலிகாப்டரில் அமர்ந்து சிங்கப்பூரின் பல பகுதி களைச் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பை கடந்த செவ்வாய்க் கிழமை பெற்றனர் இளையர் சிலர். ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஸ்கூல் பாக்கெட் மணி’ நிதியுதவி பெறும் மாணவர்களில் ஏழு பேருக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. அந்த ‘சூப்பர் பியூமா’ ரக ஹெலிகாப்டரில் செம்பவாங் விமானத் தளத்தில் தொடங்கிய ஒரு மணி நேரப் பயணத்தின்போது புக்கிட் தீமா குன்று, கரையோரப் பூந்தோட்டங்கள், மரினா பே சேண்ட்ஸ், செந்தோசா போன்ற இடங்களை மாணவர்கள் ஹெலி காப்டரில் இருந்தே பார்த்து மகிழ்ந்தனர்.

அத்தகைய வாய்ப்புப் பெற்ற யீ‌ஷுன் உயர்நிலைப்பள்ளி மாண வர் அருள் கார்த்திக், 13, (படத்தில் இடது ஓரம்) விமானப் பயணத்தின்போதுகூட காணக் கிடைக்காத அரிய காட்சியாக இது அமைந்தது என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். நாட்டின் எதிர்காலமாகத் திக ழும் இளையருக்குக் கிடைத்த இந்த வாய்ப்பின்போது ஹெலிகாப் டரின் விமானியாக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக கேப்டன் ஆதித்யா சர்மா கூறினார்.

சிங்கப்பூர் ஆகாயப் படையின் விமானிகளுள் ஒருவரான கேப்டன் ஆதித்யா சர்மா ஓட்டிய ஹெலிகாப்டரில் அமர்ந்து சிங்கப்பூரின் முக்கிய இடங்களைக் கண்டு களித்த மாணவர்களுக்கு மாஸ்டர் சார்ஜண்ட் மார்க் ஹோ இடங்களை அடையாளம் காட்டினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்