சுடச் சுடச் செய்திகள்

இன நல்லிணக்கம் வளர்க்கும் கபடிப் போட்டி

அனன்யா ரவிச்சந்திரன்

அறிமுகமே இல்லாத கபடி விளையாட்டை தன் பள்ளியைப் பிரதிநிதித்து விளையாடிய 14 வயது ஜோனதன் லிம்முக்கு அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கபடிப் போட்டியிலும் கலந்து கொள்ள மேலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ‘விஸ்லாஸ் புரொடக்ஷன்ஸ்’ எனும் அமைப்பின் ஏற்பாட்டில் பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் கலந்துகொண்ட ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியைச் சேர்ந்த சீன மாணவர் லிம், சக இந்திய மாணவர்களோடு விளையாடும் போது ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும், சிறிது நேரத் திற்கு பிறகு குழுவினருடன் நெருக்கமானதோடு இந்தியப் பாரம்பரிய விளையாட்டான கபடியின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். இந்தப் போட்டியின் மூலம் இந்தியர்களின் கலாசார விளை யாட்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது என்ற லிம், வருங்காலத்தில் கபடி, பள்ளியில் முழுநேர இணைப்பாட நட வடிக்கையானால் அதில் சேர விருப்பம் தெரிவித்தார். 2014இல் 7 பள்ளிகளிலிருந்து 11 குழுக்களுடன் தொடங்கிய இப்போட்டியில் இவ்வாண்டு 8 பள்ளிகளிலிருந்து 15 குழுக்கள் பங்கெடுத்தன.

மாணவர்களுக்கு ஏற்படும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் தரைவிரிப்பின் மீது போட்டிகள் நடத்தப்பட்டன. படம்: விஸ்லாஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon