சுடச் சுடச் செய்திகள்

கொள்கையில் இருந்து தளர்ந்தது கிடையாது: சகாயம் பேச்சு

சென்னை: தமது 24 ஆண்டுகால பணிக் காலத்தில் கொள்கையில் இருந்து ஒருபோதும் தளர்ந்தது கிடையாது என நேர்மையான செயல்பாட்டிற்குப் பெயர் பெற்ற சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்று திரும்பத் திரும்பச் சொல்வதால்தான், கடந்த 24 ஆண்டுகளில் தாம் 24 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “நான் மதுரை ஆட்சியராக இருந்தபோது, எனக்கு 200 கோடி ரூபாய் வரை கொடுக்கத் தயாராக இருந்ததாகத் தகவல். எனக்கு சுடுகாட்டில் படுக்கக்கூட பயமில்லை; ஆனால் சுதந் திர நாட்டில் இருக்கத்தான் பயமாக உள்ளது,” என்றார் சகாயம். நேர்மையைக் கடைப்பிடிக்கும் குணம் தமது பெற்றோரிடம் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், நேர்மையான செயல்பாடு காரணமாகவே மக்கள் தம்மை இன்னும் நினைவில் வைத்திருப்பதாக மேலும் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon