ஸிக்கா கிருமி: ஜோகூரில் தீவிர கண்காணிப்பு

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் புதிதாக மேலும் இருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியதாக வெளிவந்த தகவலைத் தொடர்ந்து ஜோகூரில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. ஜோகூர் மாநில சுகாதார சுற்றுப்புற மற்றும் தகவல் குழுவின் தலைவர் அயுப் ரஹ்மாட் இதனைத் தெரிவித்தார். ஜோகூர் பாலம் மற்றும் தஞ்சூங் கூப்பாங்கில் உள்ள துவாஸ் சோதனைச் சாவடி வழியாக ஜோகூருக்குள் நுழையும் இடத்திலும் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இவ்விரு வழிகளையும் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஜோகூர் பாலம் வழியாக மற்றும் துவாஸ் பாலம் வழியாக வரும் பயணிகளின் வெப்ப அளவை சுகாதார அதிகாரிகள் சோதனை செய்வர் என்று அயுப் ரஹ்மாட் கூறினார். அத்துடன் ஜோகூரில் வீடமைப்புப் பேட்டைகளிலும் சிங்கப்பூருக்கு அன்றாடம் பயணம் செய்யும் மலேசியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் மேலும் பலருக்கு ஸிக்கா கிருமி தொற்றியதாக தகவல் வெளிவந்தால் அவ்விரு நுழைவிடங்களிலும் கூடுதலாக மருத்துவ அதிகாரிகள் அமர்த்தப் படுவர் என்றும் அயுப் கூறினார்.

லிபியாவில் கடாஃபியின் மகன் 6 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை டிரிபோலி: லிபியத் தலைவர் கடாஃபியின் இரண்டாவது மகன், 6 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கள் கூறுகின்றன. பொதுமன்னிப்பு நடவடிக்கையின் கீழ் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் கூறின. சயிஃப் கடாஃபி 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். லிபியாவில் ஏற்கெனவே அரசியல் கொந்தளிப்பு நிலவுகிறது. இந்நிலையில் இவர் விடுவிக்கப் பட்டது அங்கு மேலும் அரசியல் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வழிவிடும் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

16 Oct 2019

கட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2019

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு