சகிப்புத்தன்மையை வளர்க்க போராடும் மிதவாத அமைப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஆகப்பெரிய முஸ்லிம் அமைப்பின் துணைப்படைப் பிரிவு, ராணுவ அங்கி அணிந்து, தங்கள் கொள்கைகளை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு, சமய சகிப்புத்தன்மையற்ற நிலையைத் துடைத்தொழிக்கவும் அனை வரையும் உள்ளடக்கும் இஸ்லாமி யப் பாணியைக் கட்டிக்காக்கவும் களமிறங்கியுள்ளது. மொத்தம் 45 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட நடாதுல் உலாமா அமைப்பைச் சேர்ந்த “மிதவாதப் போராளிகள்”, உலகிலேயே ஆக அதிகமான முஸ்லிம்கள் வாழும் இந்தோனீசி யாவில் அதிதீவிர சமயப் பிரி வினரின் தலையெடுப்பை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அண்மையில், ஹிஸ்ப் உட்- தஹ்ரிர் எனும் தீவிரவாத அமைப்பின் கூட்டம் நடைபெற்ற ஹோட்டலுக்கு நூற்றுக்கணக்கான மிதவாதப் போராளிகள் படை யெடுத்துச் சென்றனர். போலிசார் வந்து அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்வதற்குள் ஹோட்டல் கட்டடத்தைச் சூழ்ந்துகொண்டு, கூட்டத்தை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தினர். ஹிஸ்ப் உட்-தஹ்ரிர் அமைப்பு, இந்தோனீசியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தி இஸ்லாமிய அரசாட்சியை நிலை நாட்ட விரும்புகிறது.

இந்தோனீசியாவின் ஆகப் பெரிய முஸ்லிம் அமைப்பான நடாதுல் உலாமாவின் பன்சர் எனும் துணைப் படைப் பிரிவின் உறுப்பினர்கள் ராணுவ உடை அணிந்து கொள்கைகளை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு நாட்டில் சகிப்புத் தன்மையை வளர்க்க போராடி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’