பொதுவிருது டென்னிஸ்: 20 வயது வீராங்கனை சாதனை

பாரிஸ்: பிரெஞ்சு பொதுவிருது டென் னிஸ் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி லாட்வியா வீராங்கனை ஆஸ்டா- பென்கோ வெற்றியாளர் பட்டத்- தைக் கைப்பற்றினார். 'கிராண்ட்ஸ்லாம்' என்றழைக்- கப் படும் பிரெஞ்சு பொதுவிருது டென்னிஸ் விளையாட்டுத் தொடர் பிரான்சின் தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது. இதில் பெண்- கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 4ஆம் நிலை வீராங்- கனைச் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 47ஆம் நிலை வீராங்- கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ- வும் (லாத்வியா) மோதினர். அனுபவம் வாய்ந்த ஹாலெப்பே வெற்றி பெறுவார் என்று கணிக்கப்- பட்ட நிலையில் முடிவு அதற்கு நேர்மாறாக அமைந்தது. தொடக்க செட்டில் முதல் 8 போட்டிகளில் இருவரும் தலா 2 சர்வீஸ்களை முறியடித்து 4-4 என்று சமநிலை- யில் இருந்தனர். இருப்பினும் ஆஸ்டாபென்கோ பந்தை அடிக்கடி வெளியே அடித்து நிறைய தவறு- களை இழைத்தார். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஹாலெப் 10வது போட்டியில் அவரது சர்வீசை தகர்த்து முதல் செட்டை வசப்படுத்தினார்.

2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் 20 வயதான ஆஸ்டாபென்கோ 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை தோற்கடித்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சொந்தமாக்கினார். லாட்வியா நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை யாகும். "20 வயதிலேயே வெற்றி யாளர் கிண்ணத்தைக் கைப் பற்றி யதை என்னால் நம்ப முடிய வில்லை," என்று ஆஸ்டா- பென்கோ உணர்ச்சிப்பெருக்- குடன் கூறினார். கிராண்ட்ஸ்லா- மில் டாப்- 32 வீரர், வீராங்கனை- களுக் குப் போட் டித் தரவரிசை என்று தனியாக வழங்கப்படும். ஆஸ்டா பென்கோ வுக்கு அத்த- கைய தரவரிசை கிடைக்கவில்லை.

20 வயதில் கிராண்ட்ஸ்லாம் கிண்ணத்தை வென்ற லாட்வியா நாட்டு டென்னிஸ் வீராங்கனை ஆஸ்டாபென்கோ. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!