காற்பந்து: இங்கிலாந்தை காப்பாற்றிய ஹேரி கேன்

ஹேம்டன் பார்க்: இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்று காற்பந்துப்போட்டி ஒன்றில், அது- வரை முன்னணியில் இருந்த ஸ்காட்லாந்துக்கு எதிராக, ஆட்டம் முடியும் தறுவாயில் கோல் போட்டு இங்கிலாந்தைக் காப்பாற்றினார் ஹேரி கேன். ஆட்டத்தின் 70வது நிமி டத்தில் ஆக்ஸ்லேட் சேம்பர்லேன் போட்ட கோலால் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆனால், ஆட்டத்தின் 87ஆம் நிமிடம் தொடங்கி மூன்று நிமிடங்களில், கிடைத்த ப்ரீகிக் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இரண்டு கோல்கள் போட்டு இங்- கிலாந்தை தோல்வி யின் விளிம்- பிற்குத் தள்ளினார் ஸ்காட்லாந்தின் செல்டிக் குழு வின் லே கிரிஃபிட்ஸ். வெற்றிக் களிப்பில் மிதந்து கொண் டிருந்த ஸ்காட்லாந்து ரசிகர்களுக்கு ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அதிர்ச்சியைத் தந்தார் இங்கிலாந்து தாக்குதல் ஆட்டக்- காரரான ஹேரி கேன். இனி ஸ்காட்லாந்து உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணியும் கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார். படம்: ஏஎப்பி

19 Oct 2019

லாரா கணிப்பு: கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்