குசால் பெரேராவிற்குப் பதிலாக தனஞ்சயா

ஐ.சி.சி. வெற்றியாளர் கிண்ணத் தொடரில் கடந்த 8ஆம் தேதி இந்தியா = இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 322 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணியின் 4வது வீரராக களம் இறங்கிய குசால் பெரேரா 44 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் மோசமாக இருந்ததால் மாற்று வீரரைத் தேர்வு செய்ய இலங்கை முடிவு செய்தது.

அதன்படி அவருக்குப் பதிலாக தனஞ்செயா டி சில்வாவை தேர்வு செய்தது. இதற்கு ஐ.சி.சி. வெற்றியாளர் கிண்ணத் தொழில்- நுட்பக் குழு ஒப்புதல் அளித்தது. பாகிஸ் தானுக்கு எதிராக நாளை கார்டிஃ பில் நடைபெறும் போட்டி- யில் தனஞ்சயா டி சில்வா இடம்பெறு வார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரை- யிறுதிக்கு முன் னேறும். 25 வயதாகும் தனஞ்சயா டி சில்வா 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 334 ஓட்டங்கள் எடுத்- ததுடன் நான்கு விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.