பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. இப்படத்தை அவரது சகோதரர் சூர்யா தயாரிக்கிறார் என்பதுதான் கூடுதல் சிறப்பு. ‘பசங்க 2’, ‘கதகளி’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய மூன்று படங்களில் இடைவிடாது பணியாற்றினார் இயக்குநர் பாண்டிராஜ். அம்மூன்று படங்களுமே குறைந்த இடைவெளியில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து சிறு இடைவெளி விட்டு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே, தனது உதவியாளர்களுக்கு கைகொடுக்கவும் அவர் தவறவில்லை. அந்த வகையில் அவரது உதவி இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள ‘செம’ படத்தை ரவிச்சந்திரனுடன் இணைந்து தயாரித்தார் பாண்டிராஜ். இந்நிலையில், தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதியவர், அதை கார்த்தியிடம் சொன்னாராம். கார்த்திக்கு பிடித்துப் போக, மேலும் தன் சகோதரிடமும் விவரம் சொல்ல, இந்தப் படத்தை தாமே தயாரிக்க முன்வந்துள்ளார் சூர்யா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘துணிந்து செய்’ படத்தில் ரத்தன் மவுலி, நயனா. படம்: ஊடகம்

09 Dec 2019

துணிந்து செய்

அப்பா செல்லமான காஜல் விதவிதமாக கேக் செய்து அப்பாவை சாப்பிடச்சொல்லி ரசிப்பாராம். படம: ஊடகம்

08 Dec 2019

இட்லி, சாம்பாரில் மயங்கிய காஜல்