சுடச் சுடச் செய்திகள்

சூர்யா படத்தில் எட்டு பாடல்கள்

சூர்யாவின் அடுத்த படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளனவாம். விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இம்முறை சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். மேலும், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசை, அனிருத். ‘ஸ்பெஷல் 26’ என்ற படத்தின் கதையைப் பின்னணியாகக்கொண்டு இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அக்குறிப்பிட்ட படத்தில் பாடல்களே இல்லையாம். ஆனால் விக்னேஷ் சிவனே, தனது திரைக்கதைக்குள் எப்படியோ 8 பாடல்களைப் புகுத்திவிட்டார். அனைத்துமே படத்தின் கதையோடு ஒன்றியே இருக்குமாம். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon