பிரபுதேவாவுடன் லட்சுமி மேனன்

பிரபுதேவாவுடன் முதன் முறையாக லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘யங் மங் சங்’. தேவி படத்தை தொடர்ந்து இதிலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது ஒரு பீரியட் படமாம். புதுமுக இயக்குநர் எம்எஸ் அர்ஜூன் இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி ராமிடம் பணியாற்றியவர். ‘யங் மங் சங்’கிற்காக பாடலாசிரியராகவும் உருவெடுத்துள்ளார் பிரபுதேவா. அம்ரேஷ் இசையமைக்க, சங்கர் மகாதேவன் அந்தப் பாடலைப் பாடியுள்ளார். இருபதே நிமிடங்களில் பாடல் பதிவு முடிந்துவிட்டதாம். அந்தளவு எளிமையான, அதேசமயம் இசைக்கேற்ற வகையில் வரிகளை அளித்து அசத்திவிட்டாராம் பிரபுதேவா. “குறிப்பிட்ட ஒரு பாடல் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக இயக்குநர், இசைய மைப்பாளரிடம் எனது கருத்தைக் கூறினேன். உடனே இருவரும் என்னையே அப்பாடலை எழுதுமாறு கூறினர். நானும் தயக்கமின்றி ஒப்புக் கொண்டேன்,” என்கிறார் பிரபுதேவா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்