‘திருமணம் செய்யாத, சிரிக்காத ஊர் மக்கள்’

கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நவீன் கிருஷ்ணா இயக்கும் புதிய படம் ‘உத்ரா’. இவர் ஏற்கெனவே ‘உச்ச கட்டம்’, ‘நெல்லை சந்திப்பு’ ஆகிய படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். பின்னர், விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் அறிமுகமான ‘சகாப் தம்’ படத்துக்கு கதை, திரைக் கதை, வசனம் எழுதினார். இப்போது மீண்டும் இயக்கத் தில் கவனம் செலுத்துகிறார்.

மூன்றாவது படத்தில் எல்லாமே வித்தியாசமாக இருக்க வேண்டு மென நினைத்தாராம். இதை அடுத்து ‘ஃபேஸ்புக்’ வாயிலாக இப்படத்துக்கு புதிய பாடலாசிரியர் களைத் தேடிப் பிடித்துள்ளார். இவர் விடுத்த அழைப்பைக் கண்டு, பலர் கவிதைகளும் பாடல் களும் அனுப்பியுள்ளனர். அவர்க ளில் இருந்து அய்யப்ப மாதவன், தமிழ்ச்செல்வி நிக்கோலஸ், வடிவரசு, அ.வெண்ணிலா ஆகிய நால்வரை தேர்வு செய்து, இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியர்க ளாக அறிமுகம் செய்துள்ளார் நவீன் கிருஷ்ணா. விஷ்வா, விவந்த், சிநேகா நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தவொரு விஞ்ஞான வளர்ச்சியையும் ஏற்றுக் கொள் ளாத ஒரு மலையடிவார கிராமத் தில் நடப்பதான கதை இது. கைபேசி கோபுரங்களை அமைத்தால் பறவைகள் பாதிக்கப்படும் என்பது கிராம மக்களின் கவலை. அந்த ஊரில் திருவிழாவும் இல்லை, களியாட்டமும் இல்லை.

“இப்படியொரு வித்தியாசமான கிராமத்தைப் பற்றி தகவல் கிடைத்ததும் அந்த ஊரையே கதைக்களமாக்கி விட்டேன். தமிழகத்தின் போடி பகுதிக்கு அருகே உள்ள கொட்டக்குடி என்கிற கிராமம் அது,” என்று சிலிர்த்தபடியே சிரிக்கிறார் நவீன் கிருஷ்ணா. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் சில காலமாக திருமணம் செய்து கொள்வதில்லையாம். இன் னமும் கூட பழங்கால உணவுமுறை தான் பழக்கத்தில் உள்ளது. உணவில் உப்பு சேர்ப்பதில்லை. நம்பமுடியாத இன்னொரு கொடுமை, அந்த ஊரிலுள்ள யாரும் சிரிப்பதே இல்லை என நவீன் சொல்லும் தகவல்களைக் கேட்க ஆச்சரியமாக உள்ளது.

‘உத்ரா’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி