சுடச் சுடச் செய்திகள்

இறால் முட்டை ஏற்றுமதி முறியடிப்பு

இந்தோனீசியாவிலிருந்து பில்லியன் கணக்கான ரூப்பியா மதிப்புள்ள இறால் முட்டைகளை சிங்கப்பூருக்கு சட்ட விரோதமாக ஏற்றுமதிச் செய்ய இடம்பெற்ற ஒரு முயற்சியை இந்தோனீசியாவின் தேசிய போலிஸ் சிறப்பு குற்றவியல் இயக்குநரகம் முறியடித்து இருவரை விசாரிக்கிறது. இந்தோனீசியாவின் பாந்தெனில் இருக்கும் செங்காரெங் நகரில் உள்ள அனைத்துலக விமானநிலையம் வழியாக அந்த முட்டைகள் ஏற்றுமதியாகவிருந்தன. “எட்டு கைப்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த 208,756 முட்டைகளை நாங்கள் கைப்பற்றி உள்ளோம்,” என்று அந்த இயக்குநரகத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் புர்வாடி தெரிவித்து இருக்கிறார். அந்த முட்டைகள் ஏற்றுமதியாகி இருந்தால் அரசாங்கத்திற்கு 31.3 பில்லியன் ரூப்பியா ($3.2 மில்லியன்) இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றார் அவர்.

பிடிபட்ட முட்டைகள் பாந்தெனில் இருக்கும் கெரிட்டா கடலில் விடப்பட்டன. படம்: புளூம்பர்க்