சுடச் சுடச் செய்திகள்

ஒத்துழைக்க சிங்கப்பூர் - சீனா இணக்கம்

சிங்கப்பூரும் சீனாவும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டு தங்களுக் கிடைப்பட்ட தொடர்புகளை மேம் படுத்த இணங்கி இருக்கின்றன. நிதித்துறை ஒத்துழைப்பை அதி கரிக்கவும் பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் அவை இணங்கி இருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை இணைப் பதற்கு சீனா பிரம்மாண்டமான திட்டம் ஒன்றை தீட்டி இருக்கிறது. அந்தத் திட்டத்திற்கு ‘பிஆர்ஐ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

“அந்தத் திட்டம் அருமையான ஒரு திட்டம். சிங்கப்பூர் எப் போதுமே அதற்கு ஆதரவு அளித்துவருகிறது,” என்று நேற்று பெய்ஜிங் நகரில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரி வித்தார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் அவர் செய்தியாளர் களைச் சந்தித்தார். மூன்று கண்டங்களை இணைப்பதற்கான சீனாவின் திட்டம் பிரம்மாண்டமான திட்டமாக 2013ல் தொடங்கப்பட் டது. சாலைகள், ரயில்பாதைகள், துறைமுகங்கள், தொழில் பூங்காக் கள் ஆகியவற்றைத் தரை வழி யிலும் கடல் வழியாகவும் அமைத்து அதன்மூலம் அந்த மூன்று கண்டங்களையும் இணைப் பது சீனத் திட்டத்தின் இலக்கு.

சீனாவின் பெய்ஜிங் நகரில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது) சீன வெளியுறவு அமைச்சர் வாங் இருவரும் கைகொடுத்து இருதரப்பு ஒத்துழைப்பை, உறவை உறுதிப்படுத்தினர். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon