முன்னோடி தலைமுறையினர் மருத்துவக் கணக்கில் $180மி.

முன்னோடி தலைமுறை உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டில் அவர்களின் மருத்துவச் சேமிப்புக் கணக்கில் (மெடிசேவ்) சுமார் $180 மில்லியன் வரவு வைக்கப்படும் என்று நிதி அமைச்சு நேற்று அறிவித்தது. இதுபற்றி அவர்களுக்கு வரும் வாரத்தில் கடிதங்கள் வரும் என்றும் அமைச்சு கூறியது. முன்னோடி தலைமுறையின ரின் மருத்துவக் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகை வருடாந்திர அடிப்படையில் ஆயுள் முழுவ தற்கும் $200 முதல் $800 வரை இருக்கும். இந்த 2017வது ஆண்டில் 83 அல்லது அதற்கும் அதிக வய தாகும் முன்னோடி தலைமுறை யினர் கூடினபட்சமாக $800 பெறுவார்கள்.

68 முதல் 72 வயதாகும் முதியோருக்கு குறைந்தபட்சம் $200 கிடைக்கும். முன்னோடி தலைமுறை முதியோரின் மருத்துவச் சேமிப்புக் கணக்கில் பணம் வரவு வைக்கும் திட்டம் 2014ல் தொடங்கியது. இத்துடன் நான்காவது ஆண்டாக அந்தத் திட்டம் நீடிக்கிறது. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டம் என்ற ஒரு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 65ம் அதற்கும் அதிக வயதாகும் சிங்கப்பூரர்களுக்கு அவர்களின் மருத்துவச் சேமிப்புக் கணக்கில் பணம் வரவு வைக்கப் படுகிறது. அதோடு முன்னோடி தலைமுறையினருக்கு மேலும் வரவாக இந்த $180 மில்லியன் கிடைக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை