ஈரானில் ஐஎஸ் சந்தேகப் பேர்வழிகள் நால்வர் சுட்டுக்கொலை

அங்காரா: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இரு தாக்குதல்களைத் தொடர்ந்து அந்நாட்டுப் போலிசார் ஐஎஸ் சந்தேகப் பேர்வழிகள் நால்வரை நேற்று சுட்டுக் கொன்றதாக ஈரானிய செய்தி நிறுவனத் தகவல் கூறியது. டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் போலிசார் ஒரு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த சந்தேகப் பேர்வழிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் நால்வர் கொல்லப்பட்டதாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஓருவர் கூறினர். அந்த நால்வரில் இருவர் வெளிநாட்டினர் என்று கூறப்பட்டது. அந்த இடத்தில் துப்பாக்கி களும் வெடிமருந்துகளும் ஐஎஸ் கொடியும் கைப்பற்றப்பட்டதாக போலிஸ் உயர் அதிகாரி கூறினார். ஐஎஸ் உள்ளிட்ட போராளி களுக்கு சவூதி அரேபியா நிதி உதவி வழங்கி வருவதாக ஈரானிய அதிகாரிகள் கூறியுள் ளனர்.